உலகளாவிய நோயாக கொரோனா உருவெடுத்துள்ள நிலையில் உளநலனை பாதுகாப்பது எப்படி ? 

27

கொரோனா தொற்றுநோய் உலகெங்கும் பரவி வரும் நிலையில் எதிர்காலம் பற்றிய கவலைகளும் தொடர்ச்சியான கொரோனா செய்திகளும் உங்களுடைய மனஉளைச்சல் மற்றும் உளச்சோர்வை அதிகரிப்பதுடன் உங்களுடைய உளநல ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே இத்தகைய பாதிப்புகளில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

1. தொடர்ச்சியாக மனஅமைதியை குலைக்கும் ஊடகங்களை (தொலைக்காட்சி அலைவரிசைஇ வானொலி அலைவரிசைஇ இணையதளங்கள் ) பார்ப்பதையும் கேட்பதையும் வாசிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொடர்பான பயமுறுத்தும் செய்திகளை வெளியிடுபவர்களையும் குழுக்களையும் உங்களுடைய தொடர்பில் இருந்து நீக்கி விடுங்கள்.

3. ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில் பெரும்பகுதி மிகைப்படுத்தப்பட்ட அல்லது பொய்யான தகவல்கள் என்பதை உணர்ந்து கொள்வதுடன் அவ்வாறான செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதனால் உங்களின் அன்புக்கு உரியவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாவதற்கு நீங்கள் காரணமாவதை நிறுத்துங்கள்.

3. ஊரடங்கு சட்ட நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன் அவர்களுடன் இனிமையாக நேரத்தை வீட்டில் கழிப்பதற்கு உரிய விளையாட்டுகள் பாடல்கள் பாடுவது கீதங்களை இசைப்பது நூல்களை வாசிப்பது போன்ற ஆரோக்கியமான பொழுதுபோக்கு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. உளநல ஆரோக்கியத்தை பேணுவதற்கும் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சத்தான உணவுகள்இ ஒழுங்கான உடற்பயிற்சிகள் (வளர்ந்தவர்களுக்கு தினம் தோறும் 30 நிமிடங்களுக்கு குறையாமலும் சிறுவர்களுக்கு தினமும் 1 மணி நேரத்துக்கு குறையாமலும் ) மற்றும் போதியளவு நித்திரை (தினம் தோறும் 8 மணி நேரம் ) அவசியம்.

5. மார்கழி மாதமளவில் கொரோனா தடுப்பூசி பாவனைக்கு வரும் என்ற எதிர்கால நம்பிக்கையுடன் தேவையற்ற மனப்பாரங்களையும் கவலைகளையும் இறைவனின் பொறுப்பில் விட்டுவிடுவதுடன் மனதை அமைதியாக்க தியானத்திலும் பிரார்தனையிலும் ஈடுபடுங்கள்.

6. அரசாங்கத்தினாலும் சுகாதார துறையினராலும் வெளியிடப்படும் முக்கிய அறிவித்தல்கள் தொடர்பாக அவதானமாக இருப்பதுடன் அவற்றை உங்களுக்கு தெரிவிக்கக் கூடிய நம்பிக்கையான நண்பர்களையும் உறவினர்களையும் தொடர்பில் வைத்து இருங்கள்.

7. அதிகரித்த மனப்பதட்டம்இ பயம்இ நித்திரை கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் உங்களுடைய பிரதேசத்துக்குரிய உளநல ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உளவள ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

8. மதுபானம்இ புகைபிடித்தல் மற்றும் ஏனைய போதை பொருட்கள் மனப் பதட்டத்துக்கும் கவலைகளுக்கும் தீர்வாகாது என்பதுடன் உங்களுடைய உளநலம் மற்றும் உடல் நலத்துக்கு மேலும் ஊறுவிளைவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

9. உங்களுடைய குடும்ப உறுப்பினர்இ உறவினர் மற்றும் நண்பர்கள் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தால் அவர்களுக்கு ஆறுதல் கூறி உரிய உளநல ஆலோசனை கிடைக்க உதவி செய்யுங்கள்.

10. சிறு பிள்ளைகளும் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்ற உண்மையை அறிந்துகொள்வதோடு பெற்றோர்கள் பிள்ளைகளோடு அதிகரித்த நேரத்தை செலவழிக்கவேண்டும். அதிகரித்த அழுகைஇ நித்திரை கொள்வது மற்றும் உணவுப் பழக்கங்களில் ஒழுங்கற்ற தன்மை மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாமை போன்றவை சிறுவர்கள் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த ஆவணம் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நோய்கட்டுப்பாடு மத்திய நிலையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி தயார் செய்யப்பட்டுள்ளது

Dr முரளி வல்லிபுரநாதன் 

சமுதாய மருத்துவ நிபுணர்

SHARE