கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

48

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், முகக்கவசங்கள், பரிசோதனைக் கருவிகள், சனிட்டைஸர்கள், பாதுகாப்புக் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பெரும் எண்ணிக்கையில் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்வரிசையிலுள்ள மருத்துவ மற்றும் சுகாதார சேவையாளர்களுக்கான 1000 பாதுகாப்பு அங்கிகளை சீனா மேர்சன்ட்ஸ் போர்ட் குழுமம் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி ‘சவால் மிக்க தருணத்தில் இதயபூர்வமான உதவி’ என்ற அடிப்படையில்  50 ஆயிரம் முகக்கவசங்கள், 1000 பரிசோதனைக் கருவிகள் சுகாதார அமைச்சிடம் நன்கொடையாக சீனாவி கையளித்துள்ளது.

SHARE