தமிழ் அரசியல் தலைமைகளின் எண்ணக்கரு அன்றும் இன்றும்

74

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் :

கூட்டமைப்பின் தலைவர் ஒரு அகிம்சைவாதி. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அடிக்கடி கூறுபவர். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை நன்கு அறிந்தவர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று மட்டுமே இவர் காலகாலமாக அரசியல் செய்து வருகின்றார். தான் சொல்வதையே கட்சி செய்ய வேண்டும் அதனை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கைகளையே இவர் மேற்கொண்டுள்ளார். கட்சிகளில் சர்ச்சை வருகின்ற பொழுது சொந்த கருத்து என கூறி சமாளிப்பதில் திறமையானவர். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த அரசியல்வாதி. தமிழரசு கட்சியை வலுப்பெற செய்வதில் முன்இணைப்போடு செயற்படுபவர். கூட்டமைப்பு பலம் பெற வேண்டுமா இல்லை என்பது பற்றி அல்ல அவரது கவலை. கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும் அதனுடைய கொள்கைகளுக்கு சற்று முரணானவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் :

குறிப்பாக சொல்லப்போனால் இவர் ஒரு நாரதர். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதில் தலை சிறந்தவர். அரசியலில் விளம்பரம் தேடும் ஒரு வியாபாரி. இவர் இனப்படுகொலை பற்றியும் பேசுவார் கட்சியின் கொள்கைக்கு முரணாகவும் பதிலளிப்பார். ஏக்குத்தப்பாக ஏதாவது நடந்தால் அது தனது சொந்தக்கருத்து என கூறிவிடுவார். விடுதலைப்புலிகள் ஆயுத போராட்டத்தை இவருக்கு பிடிக்கும் ஆனால் பிரபாகரனின் ஆயுத போராட்டம் பற்றி கேட்டால் எப்பொழுதும் அதற்கு இல்லையென்ற பதிலே அவர் வாயிலிருந்து வரும். ஆவர் குளத்தோடு பிறந்ததே அவர் பேச்சு. லக்ஸ்மன் கதிர்காமர் நீல திருச்செல்வம் வரிசையில் சுமந்திரன் ஒர அறிவாளி. தேசியம் சுயநிர்ணய உரிமை தொடர்பில் அதனை விற்றுப்பிளைக்கின்றார் என்பது மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கருத்து.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா :

இவர் ஒரு ஆரம்பகால அரசியல்வாதி. போர்க்குணம் கொண்ட கூர்வால். வரலாற்றை ஆரம்பித்துவிட்டால் போதும் அடுக்கிக்கொண்டே போவார். தேசிய பற்றுள்ளவர். துற்போது இருக்க்கூடிய அரசியல் தலைமைகளுள் போராட்டம் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு தகுதியுடையவர். இவருடைய அரசியல் சானக்கியம் வேறுபட்டது. ஏனைய கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் அணைத்துச்செல்வதிலும் அணுகுமுறைகளை ஏற்படுத்துவதிலும் சிறந்தவர். பேசிப் பேசியே காலத்தை கொண்டு சென்றவர் என்றும் கூறலாம்.

பிளட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் :

திப்பு முதல் டோக்கியோ வரையிலான அரசியல் பேச்சுக்கள் இவருக்கு தெரியும். ஆரசியலில் மூத்த அரசில்வாதி. ஈழப்போரின் இதறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்தினால் தபுலிகளுக்கு ஒட்சிசன் சிடைத்துவிடுமாப் போல் ஆகிவிடும் என்று கூறியவர் 2009 முதல் அதசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர். கோலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமந்தப்பட்டதொன்று. ஊடகவியலாளர்சவராம் இவருக்கு தொடர்பு இருக்கிறது. போராட்டத்தின் வலி தெரிந்தவர். ஆரசியலில் இவருடைய தகப்பனாரல் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு நன்மதிப்புண்டு. அரசியல் பேசி பேசியே மாற்றுக்கருத்துக்களை கூறி கூறியே சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டே இவர்களின் அரசில் தொடர்ந்து செல்கிறது.

டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் :

அரசியலில் மகா நடிகன். மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவதில் சிறந்தவர். அரசியல் கைதிகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதற்காக பல முறை துடித்தவர். இடம் பொருள் ஏவல் தெரிந்து செயற்படுபவர். தோழில் ரீதியாக இவர் பெரிய கில்லாடி போராட்டத்தின் வலி தெரியும் ஆனால் அதரச படைகளோடு சிறிது காலம் சேர்ந்து செயற்பட்டவர். இவர் மீதும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் மக்களால் கூறப்பட்டது.

ஈபி.ஆர்.எல்.எப் கடசியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் :

பிரத்தியேகமாக இவருக்கு மண்டையன் குழு என்ற பெயர் இருக்கிறது. ஆனால் மண்டையன் குழு தான் இல்லையென்றும் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இராணுவதுடன் சேர்ந்து அசோக கொட்டலில் பல கொலைகளை செய்தவர் என கூறப்படகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்த பொழுது சிறந்து விளங்கினார். த தே கூ தவறான பாதையில் பயணிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முயன்ற போது அவர் அக்கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். த தே கூட்டமைப்பை உடைப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்களின் பின்னணியில் இவரும் செயற்பட்டவர் என்று கூறப்படகிறது. ஆனாலும் மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பெரிதும் உழைத்தவர். சிறந்த அரசியல்வாதி. கோலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி :

இவர் தமிழினத்தின் துரோகி என்று பலராலும் பார்க்கப்படுபவர். விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளாத தலைவர். தனது சொந்தக் கருத்தை ஒளிவு மறைவு இன்றி பேசுவார். அதனாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை இழந்தவர். தொடர்ந்தும் இவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. இவர் அரசியலில் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் அரசியலில் சகிப்புத் தன்மைக்கான விருதை பெற்றுள்ளார். இவர் ஒரு அறிவுக்களஞ்சியம். மாவை சேனாதி ராஜாவை கண்ணில் காட்டாது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் :

தேசியம் சுயநிர்ணய உரிமை என்பது இவரது கட்சியின் இலக்கு. இவரின் கட்சியல் உள்ளவர்கள் இவரை பிரபாகரனுக்கு பின் அடுத்த தலைவர் என்று கூறுவார்கள். பூகோள அரசியல் பற்றி பேசி பேசியே இவரது அரசியல் நகர்ந்து செல்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சென்ற பின் இவர்களால் பெரிதும் பிரகாசிக்க முடியவில்லை. ஒரு தேசம் இரு நாடு என்பது இவர்களது கொள்கை. து தே கூட்டமைப்பை பிளவு படுத்துவதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. தமது வாசிக்காக அரசியலில் எந்த தவிட்டுக்கொடுப்புக்களை செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.

ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் :

கொள்ளை இல்லாதவர். புணம் எங்கேயோ அங்கேயே இவரும் நிற்பார். குட்சியை வைத்து பணம் சம்பாதிப்பவர். மற்ற ஆயுத கட்சிகளை போல் எவரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனாலும் அரசியலில் இவரால் பிரகாசிக்க முடியவில்லை. தற்பொழுது மங்கொருத்து அரசியலாகவே இவரது நிலை தொடர்கிறது. ஆனால் ஈரோஸ் கட்சியை வாங்குவதற்கு பலர் போட்டி.

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் :

இவர் முன்னாள் நீதியரசர். தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக முதலமைச்சரானார். திண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தவர் என்று கூறப்படுகிறது. அரசியலில் போதிய அறிவு இல்லாவிட்டாலும் நீதித்துறையில் தலை சிறந்தவர். மோசடிகள் இவரிடம் இல்லை. குறித்த ;த தே கூ தன்னை ஏமாற்றுகிறது என்று கருதியே அக்கட்சியில் இருந்து விலகியவர். தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பவர். சுமந்திரனுக்கும் இவருக்கும் ஆகாது. ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று செயற்படுபவர்களில் இவரும் ஒருவர்.

ஈ.பி.டி.பி கட்சியின்தலைவர் டக்ளஸ் தேவானந்தா :

இவர் மூத்த அரசியல்வாதி. ஒரு போராட்ட வீரன். மூன்று தசாப்தங்கள் பாராளுமன்ற அனுபவர் கொண்டவர். அவருக்கான வாக்கு வங்கியை என்றும் தக்கவைத்துக் கொள்பவர். தனது கொள்கையை என்றும் விட்டுக்கொடுக்காதவர். யுhழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை கொள்ளை கற்பழிப்பு ஆட்கடத்தல் சம்பவங்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. பல ஆதாரங்கள் இருந்தும் இவரை அரசாங்கத்தினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்துள்ள ஒருவர். இவருடன் யார் மோதினாலும் சந்தர்ப்பம் பார்த்து பழி வாங்குவார். விடுதலைப்புலிகளை இவருக்கு பிடிக்காது அவர்களை என்றுமே எதிரியாகத் தான் பார்ப்பவர். இவர்களது கொள்கை மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி. தற்பொழுதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்.

ஸ்ரீ டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா :

இவர் டெலோவிலிருந்து பிரிந்து சென்றவர். மகிந்த ராஜபக்சவினுடைய தேவைகளுக்காக முன்பு பயன்படுத்தப்பட்டவர். தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர். அரசியலில் இவருக்கு ஏமாற்றத் தெரியாது. ஏந்த தேர்தலையும் விட்டு வைக்காது போட்டி போடுபவர். சிலந்தியை போன்ற சுபாவம் கொண்டவர். ஆபத்தில் தனிநபர்களுக்கு உதவி செய்வதில் வல்லவர். இவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு செயற்படுவது மக்களுடைய, அரசியல்வாதிகளுடைய குற்றச்சாட்டாகும். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அவ்வாறான நிலைமை மாற்றப்படாத வரையிலும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடையாது. ஆகவே தமிழ் தலைமைகள் ஒவ்வொருவரும் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. ஏதோ ஒரு வகையில் ஆயுத போராட்டத்தோடு தொடர்புடைய இவர்கள் தமிழ் மக்களுடைய போராட்டத்தின் வலி தெரிந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதனூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் எனலாம்.

SHARE