சீனா ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய ஆப்பிள் நிறுவனம்

76
சீனா ஸ்டோரில் இருந்து  ஆயிரக்கணக்கான செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியதாக தகவல்

ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை நிர்வகிக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற துவங்கி உள்ளது. சீன ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்பிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான செயலிகளை நீக்கி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் சுமார் 29800 செயலிகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை வீடியோ செயலிகள் ஆகும். 2016 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சீன மொபைல் கேமிங் சட்டத்திற்கு ஏற்ற வகையில் இல்லாத காரணத்தால் இவை நீக்கப்பட்டதாக தெரிகிறது.
 ஆப்பிள்
இந்த சட்டத்தின் மூலம் கேம் டெவலப்பர்கள் சீன அரசாங்கத்தின் பத்திரிகை மற்றும் பப்ளிகேஷன்களுக்கான தணிக்கைக்குழு நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். இதன் மூலம் கட்டண டவுன்லோட்கள் மற்றும் இன்-ஆப் பர்சேஸ்களை வழங்க முடியும்.
எனினும், இந்த வழிமுறைகளை பின்பற்ற பல மாதங்கள் ஆகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சுமார் ஆயிரக்கணக்கான செயலிகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங் துறையில் அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
SHARE