டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக் டிக்டாக்கும்

76

டிரம்ப் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு

டிக்டாக்
டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.
டிக்டாக் மட்டுமின்றி சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீசாட் என்ற செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக டிக்டாக் தெரிவித்து உள்ளது. மேலும் இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
வீசாட்வீசாட்டின் தாய் நிறுவனமான டென்சென்ட், டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கும் நிர்வாக உத்தரவை தெளிவாக புரிந்து கொள்ள முழுமையான ஆய்வை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளது.
டிரம்பின் இந்த திடீர் நடவடிக்கையால் டிக்-டாக்கின் அமெரிக்க வியாபார உரிமத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவில் ஏதாவது மாற்றமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
SHARE