விஜய்க்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை கொடுத்த நடிகை ஆதிரை சவுந்தரராஜன்

91
விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை

விஜய்
பிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் நடித்திருந்தவர் நடிகை ஆதிரை சவுந்தரராஜன். இவர் கடந்த ஆண்டு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய்க்கு வித்தியாசமான மறக்கமுடியாத கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் ஆதிரை சவுந்தரராஜன் அளித்த பேட்டி ஒன்றில், “பிகில் பட ஷூட்டிங்கின் போது எங்கள் அணியில் இருப்பவர்கள் அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசளித்தார்கள். நானும் கொடுத்தேன்.
ஆதிரை சவுந்தரராஜன்நான் வாங்கியிருந்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்தியாசமானது. ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போல் கதாபாத்திரங்கள் பொம்மைகளாக இருந்தன. அதை நம் கைகளில் வைத்து விளையாடமுடியும். இந்த கேமில் எங்கள் அணியின் கோச் விஜய்யின் கேரக்டரையும் அவரது ஜெர்சி எண் மாறாமல் அப்படியே இணைத்திருந்தேன்.
இந்தப் பரிசைப் பார்த்த விஜய், உண்மையிலேயே பிகில் அணியைப் பார்ப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். சில நேரங்களில் தான் இதில் விளையாடுவதாகவும் விஜய் சொன்னார்.
எனது பரிசுப் பொருளைப் பார்த்து திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் மறக்கமுடியாத பரிசுப் பொருள் என்று கூறியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
SHARE