விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்

49
விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா 5.3
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சியான் மற்றும் சேன்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 5.3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 நோக்கியா 5.3
நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்
– 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி இரண்டாவது சென்சார்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி
– ப்ளூடூத், வைபை
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– எஃப்எம் ரேடியோ
சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை 189 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
SHARE