அம்பிகா 5 மில்லியன் கேட்டு ஐ.பி.சி மீது வழக்கு- டீ கடை நிகழ்சி செய்த நபர்கள் நிலை

41

 

அம்பிகா 5 மில்லியன் கேட்டு ஐ.பி.சி மீது வழக்கு- டீ கடை நிகழ்சி செய்த நபர்கள் நிலை
******************************************************************
ஐ.பி.சி தமிழில், டீ கடை என்னும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஜாடை மாடையாக அம்பிகா சற்குணராஜாவை இழுத்து அப்படி இப்படி என்று நக்கல் அடித்து பேசிவிட்டார்கள், அன் நிகழ்சியை செய்த நபர்கள். எம்.ஏ சுமந்திரனின் முழு கட்டுப்பாட்டில் உள்ள அம்பிகா, தற்போது ஐ.பி.சி தமிழ் மீது £5 மில்லியன் பவுண்டுகள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மனித உரிமை கழகத்தின் முன் நாள் செயலாளரான அம்பிகா என்னும் நபர், ஒரு தனிப்பட்ட மனிதர் அல்ல.

அவர் ஒரு அரசியல் வாதி, தன்னை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொள்ளும் மற்றும் அனைவராலும் அறியப்பட்ட நபர். அவரை பற்றி பேசுவது மற்றும் விமர்சனங்களை முன் வைப்பது என்பது தொலைக்காட்சி நிகழ்வுகளில் அன்றாடம் வரக்கூடிய ஒரு விடையம் தான். ஆனால் கடந்த தேர்தலில், ஐ.பி.சி ஊடகம் சுமந்திரனை மிகக் கடுமையாக தாக்கி செய்திகளை வெளியிட்டு வந்தது. இதற்கு பழி வாங்கும் முகமாகவே அம்பிகாவை பாவித்து சுமந்திரன் பின்னணியில், நின்று இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சொல்லப்போனால், public figure என்று சொல்லப்படும் ஒரு நபரைப் பற்றி முன் வைக்கப்படும் விமர்சனங்கள் மிகவும் சாதாரணமானவை தான். அதற்காக £5 மில்லியன் பவுண்டுகள் நஷ்ட ஈடு கோருவது என்பது, அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் விடுக்கப்படும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் எந்த ஒரு தமிழ் ஊடகம் அல்லது தொலைக்காட்சியோ ஒரு அரசியல்வாதியை பற்றி விமர்சிக்கவே முடியாது என்ற நிலை தோன்றும் அல்லவா. இருப்பினும் டீ கடை நிகழ்ச்சியில் இப்படி அம்பிகாவை தரக் குறைவாக பேசியிருக்க தேவை இல்லை. இது ஐ.பி.சி விட்ட பிழை என்ற விவாதங்களும் முன்வைக்கப்படுகிறது.

யார் இந்த அம்பிகா ?

இலங்கையில் காணமல் போன நபர்களின் பெற்றோர்களை அச்சுறுத்தியவர். யாராவது இவரிடம் சென்று மனித உரிமை மீறல் தொடர்பாக மனு கொடுத்தால். மனுவை வாங்கி விட்டு, அவர் உடனே பொலிசாரை வீட்டிற்கு அனுப்புவார். அந்த முறைப்பாட்டையே வாபஸ் வாங்க வைத்த நபர். ஜெனீவா சென்று, சித்திரவதை என்பது 3ம் உலக நாடுகளில் சர்வ சாதாரணம் என்று கூறியதோடு. சிங்கள மக்கள் முஸ்லீம்களும் காணாமல் போய் உள்ளார்கள். மேலும் அவர்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி.

தமிழர்களின் பிரச்சனையை நீர்த்துப் போக வைத்த ஒரு நபர். ஜெனிவாவில் சாட்சி சொல்ல வந்த நபர்களை கூட நேரடியாக மிரட்டி இருக்கிறார். இதனை காரணம் காட்டி எந்த ஒரு தமிழரும் இவர் மீது மான நஷ்ட வழக்கை தொடுக்க முடியும் என்பது அவருக்கே தெரியாத விடையம்.

எனவே பொதுவாக வரும் தொலைக்காட்சி நிகழ்வுகளில், இது போன்ற அம்சங்கள் சிலவேளை இருக்கலாம், அதனை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தே மேல் ஓங்கி நிற்கிறது.

மேலும் தமிழ் ஊடகங்களை மிரட்டும், இந்த நடவடிக்கைக்கு அம்பிகா துணை போவது மற்றும் சுமந்திரன் சொல் பேச்சை கேட்டு அவர் செயல்படுவதும் கண்டிக்கத்தக்க விடையம் ஆகும்.

SHARE