பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கொரோனா தொற்றாளர்கள்

26

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 9 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 935ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 935 பேர் வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 176 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 12 பேர் இந்த வைரஸ் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE