மட்டுவில் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் கைது

27

மட்டக்களப்பு – பிள்ளையாரடி பகுதியில் கோவிலுக்கு சென்று திரும்பிய வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அறுத்துச் செல்லப்பட்ட தங்கச்சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட் நிலையில் பிள்ளையர் ஆலயத்தடியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் மற்றும் கொள்ளையிட்ட தங்கச்சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE