ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்

128
ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்

ஐடெல் ஏ47
ஐடெல் மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏ47 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5 எம்பி ஏஐ டூயல் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, பல்வேறு அம்சங்களை வழங்கும் கைரேகை சென்சார், கஸ்டமைஸ்டு ஷாட்கட் அம்சம், பேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
 ஐடெல் ஏ47
ஐடெல் ஏ47 சிறப்பம்சங்கள்
– 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 5 எம்பி ஏஐ டூயல் கேமரா
– 5 எம்பி செல்பி கேமரா
– டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
– ஆண்ட்ராய்டு 9 கோ எடிஷன்
– 3020 எம்ஏஹெச் பேட்டரி
புதிய ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பிள் மற்றும் ஐஸ் லேக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது.
SHARE