வாட்டர்பால் டிஸ்ப்ளே கொண்ட சியோமி கான்செப்ட் போன்

132
அசத்தல் அம்சங்கள் நிறைந்த சியோமி கான்செப்ட் போன்

சியோமி கான்செப்ட் போன்
சியோமி நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் போர்ட்லெஸ் டிசைன் மற்றும் குவாட்-கர்வ்டு வாட்டர்பால் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் நான்கு புறங்களிலும் வளைந்த வாட்டர்பால் டிஸ்ப்ளே உள்ளது.
மேலும் இந்த கான்செப்ட் ஸ்மார்ட்போன் போர்ட்லெஸ் யுனிபாடி டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே முன்புற பேனலை முழுமையாக மறைக்கும் வகையில் உள்ளது. 88-டிகரி ஹைப்பர் குவாட் கர்வ்டு ஸ்கிரீன் டிசைன் விஷூவல் இன்டர்பேஸ்களை போனின் மீது நீரோட்டம் போல் விழ செய்கிறது.
 சியோமி கான்செப்ட் போன்
ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த பிரேமும் ஸ்கிரீன் கொண்டு மறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பட்டன்கள் மற்றும் போர்ட்கள் எதுவும் இல்லை. 3டி பாண்டிங் முறையில் 88-டிகிரி குவாட் கர்வ்டு கிளாஸ் பேனலை பிளெக்சிபில் டிஸ்ப்ளே மீது பொருத்தி இருப்பதாக சியோமி தெரிவித்து உள்ளது.
சியோமி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 46 தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், இசிம் சிப் மற்றும் பிரெஷர் சென்சிட்டி டச் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
SHARE