சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

46

 

சூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தகுதியான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியாகிய இந்த திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களில் ஒன்றாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஆஸ்கார் விருதை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஒஸ்கார் விருதுக்கு தகுதி பெறும் படங்களின் அடுத்த பட்டியலில் முழுமையான விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE