தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்!

25

 

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

இதவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 417 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 3 ஆயிரத்து 155 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 483 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE