திருமண திகதியை அறிவித்த விஷ்ணு விஷால்

75
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டாவின் திருமணம் ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெற இருக்கிறது.
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா
இதற்கான அழைப்பிதழை நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
SHARE