மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன

29

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் டெல்லி அணிக்கு ரிஷப் பந்த்தும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதற்கு முன்னதாக 28 முறை மோதியுள்ளன. இதில் 16 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 முறை டெல்லி அணியும் வெற்றிபெற்றுள்ளன.

குறிப்பாக கடந்த தொடரின் இறுதிப் போட்டியில் இவ் இரு அணிகளுமே பலப்பரீட்சை நடத்தின. இதில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சம்பியன் பட்டம் வென்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டியில், மும்பை அணியை தோற்கடிக்க டெல்லி அணி கடுமையாக போராடும்.

SHARE