மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கெபிட்டல்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வீழ்த்தியுள்ளது

38

ஐ.பி.எல் தொடரின் 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கெபிட்டல்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 138 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கெபிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

SHARE