றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன

33

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும், ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரில் பெங்களூர் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி மூன்றில் ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்வி என புள்ளிபட்டியலில் கடைசிக்கு முதல் இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் இதற்கு முன்னதாக 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் தலா 10 வெற்றிகளை பதிவுசெய்துள்ளன. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை.

SHARE