முதன்மையான கால்பந்து லீக் போட்டிகளின் முடிவுகள்!

37

ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் முதன்மையான கால்பந்து லீக் தொடர்கள், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் லா லிகா, செர்ரி ஏ மற்றும் இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், இன்றைய லீக் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில், நடைபெற்ற பார்சிலோனா மற்றும் கேட்டாஃபி அணிகள் மோதிய போட்டியின் முடிவினை பார்க்கலாம்.

கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணி 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பார்சிலோனா அணி சார்பில், லியோனல் மெஸ்ஸி 8ஆவது மற்றும் 33ஆவது நிமிடங்களில் என இரண்டு கோல்களை அடித்தார்.

கேட்டாஃபி அணியின் வீரரான சோஃபியன் ஷக்லா 28ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு ஓன் கோலொன்று அடித்துக் கொடுத்தார்.

பார்சிலோனா அணியின் மற்றொரு வீரரான ரொனால்ட் அராஜோ 87ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், நட்சத்திர வீரரான அன்டானியோ கிறிஸ்மேன் 93ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் அடித்தனர்.

கேட்டாஃபி அணியின் சார்பில், இனிஸ் யுனல் 69ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.

மேலும், பார்சிலோனா அணியின் வீரரான க்ளிமென்ட் லெண்ங்லெட் 12ஆவது நிமிடத்தில் கேட்டாஃபி அணிக்கு ஓன் கோலொன்றை அடித்துக் கொடுத்தார்.


அடுத்ததாக இத்தாலியில் நடைபெறும் செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரில், நப்போலி மற்றும் லெஸியோ அணிகள் மோதிய போட்டியின் முடிவினை பார்க்கலாம்.

சேன் பாவ்லோ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், நப்போலி அணி 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் நப்போலி அணி சார்பில், லோரென்சோ இன்சைன் 7ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் 53ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் என இரண்டு கோல்கள் அடித்தார்.

மெட்டியோ பொலிடானோ 12ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ட்ரைஸ் மெர்டன்ஸ் 65ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் விக்டர் ஒசிம்ஹென் 80ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

லெஸியோ அணி சார்பில், சிரோ இம்மொபைல் 70ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் செர்ஜ் மிலின்கோவிக்-சாவிக் 74ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.


அடுத்ததாக இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், லெய்செஸ்டர் மற்றும் வெஸ்ட் புரும் அணிகள் மோதிய போட்டியின் முடிவினை பார்க்கலாம்.

கிங் பவர் விளையாட்டங்கில் நடைபெற்ற இப்போட்டியில், லெய்செஸ்டர் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் லெய்செஸ்டர் அணி சார்பில், ஜெமி வார்டி 23ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜோனி எவன்ஸ் 26ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் கெலெச்சி ஹியேன்சோ 36ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

SHARE