அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

27
துப்பாக்கி வன்முறையில் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் பொறுபேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பைடன் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ அமெரிக்க மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது.

நான் பதவி ஏற்று 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி அளித்தேன். தற்போது 100 நாட்களில் 220 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

ஐரோப்பாவில் நேட்டோ படைகளை வைத்திருப்பதை போல இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வலுவான இராணுவத்தை நிறுத்தும். அது மோதலுக்காக அல்ல. மோதலை தவிர்ப்பதற்காக மட்டுமே என்பதை சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE