மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

26
கொரேனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறையும் மே தின கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியனவைகளை தொழிலாளர்கள்  இழந்துள்ளனர்.

ஆனாலும் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் வலிமையானது என்பதை நாம் அறிவோம்.

இதேவேளை மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கும்” என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE