மொத்த பலி எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இந்தியா

23
கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம்

கொரோனா நோயாளி
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3.31 கோடியுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 1.99 கோடியை நெருங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதேநேரம் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 2.18 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலக அளவில் மொத்த பலி எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 5.91 லட்சம் பேர், பிரேசிலில் 4.07 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்து மெக்சிகோ, இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பலி எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.

SHARE