கைது செய்யப்பட்ட யாழ் காங்கேசன்துறை புத்தர் சிலையை உடைத்த இளைஞன்

22
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்ததாக இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், கீரிமலை நல்லிணக்க புரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அருகில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார்.

புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

SHARE