யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

16

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியானவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் கடற்படையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

04 மூடைகளில் 58 சிறு பெக்கற்றுகளாக பொதியிடப்பட்டிருந்த நிலையில், 183 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக கடல்மார்க்கமாக நாட்டுக்கு வருகை வரும் தரப்பினரை கைது செய்வதற்காகவும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் வடக்கு கடற்பரப்பில் ரோந்து பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

SHARE