ரஷ்யாவினால் வழங்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பூசி இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

19

ரஷ்யாவினால் வழங்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பூசியில் ஒருதொகை இன்று (04) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

கத்தாருக்கு சொந்தமான விமானத்தில் 15,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ரஷ்யாவுக்கான பிரதி தூதுவர், தடுப்பூசி தொகையை ஔடத உற்பத்தி, விநியோகம், ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் கையளித்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன உள்ளிட்டோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

முதற்கட்டமாக இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

SHARE