விரைவில் இந்தியா வரும் ரெட்மி வாட்ச்

66
விரைவில் இந்தியா வரும் ரெட்மி வாட்ச்

ரெட்மி வாட்ச்
ரெட்மி பிராண்டு தனது ரெட்மி வாட்ச் இந்தியாவில் மே 13 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இதே தினத்தில் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எம்ஐ வாட்ச் லைட் மாடலும் சில சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசரில் வாட்ச் சிலிகான் ஸ்டிராப் மற்றும் வலது புறத்தில் பட்டன் இடம்பெற்று இருக்கிறது. புது ரெட்மி வாட்ச் பில்ட்-இன் ஜிபிஎஸ் / GLONASS வசதி, 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார் வழங்கப்படுகிறது.
 ரெட்மி வாட்ச் ரெட்மி வாட்ச் அம்சங்கள்
– 1.4 இன்ச் 320×320 பிக்சல் LCD ஸ்கிரீன்
– 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 3-ஆக்சிஸ் கைரோஸ்கோப்
– ப்ளூடூத் 5.0
– 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 230 எம்ஏஹெச் பேட்டரி
SHARE