இணையத்தில் வெளியாகி உள்ள மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்

72
மடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரம்

ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபோன் 8 இன்ச் பிளெக்சிபில் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக மடிக்கக்கூடிய ஐபோன் காப்புரிமை விவரங்கள் பலமுறை இணைத்தில் வெளியாகி இருந்தது.
 மடிக்கக்கூடிய ஐபோன் எனினும், இதுபற்றி ஆப்பிள் எந்த தகவலையும் வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் 8 இன்ச் QHD+ 1800×3200 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 15 முதல் 20 லட்சம் மடிக்கக்கூடிய ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மடிக்கக்கூடிய ஐபோனிற்கான டிஸ்ப்ளேக்களை சாம்சங் டிஸ்ப்ளே வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது.
SHARE