. தோனி எடுத்த அதிர்ச்சி முடிவு! காரணம் என்ன?

45

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நேரத்தில், வீட்டிற்குள்ளே இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறிது நேரம் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் ஐபிஎல் வீரர்களுக்கும் பரவியதால், உடனடியாக ஐபிஎல் போட்டியை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வீரர்கள் அவர்களது வீட்டிற்குச் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

வெளிநாடு வீரர்களை அவர்களுடய சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஐபிஎல் நிர்வாகம், அணிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் சொந்த ஊர் திரும்பிய பின்னர்தான், ஓட்டலில் இருந்து திரும்புவேன் என்று எம்எஸ் டோனி உறுதியாக கூறிவிட்டாராம்.

மேலும், பேசிய அவர், நான் கடைசியாக தான் விடுதியில் இருந்து ஊருக்கு கிளம்புவேன். முதலில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் அனைவரையும் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்புங்கள்.

முதலில் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என தோனி கூறினார். அதோடு இந்திய வீரர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப வேண்டும் என்றார்.

அனைவரும் தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்ற பிறகு தான் ராஞ்சிக்கான விமானத்தை இன்று பிடிப்பதாக தெரிவித்தார் தோனி. இவர் தெரிவித்த இந்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

SHARE