விஜய்க்கு அடுத்த படத்தில் சம்பளம் 100 கோடிக்கும் மேலா? செம மாஸ் தகவல்

26

 

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தளபதி 65 படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படத்திற்காக தளபதி விஜய்க்கு ரூ.120 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE