சுரேஷ் ரெய்னா கேட்ட உதவி! பத்தே நிமிடத்தில் செய்து முடித்த நடிகர் சோனு சூட்:

35

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் டுவிட்டரில் உதவி கேட்ட நிலையில், உடனடியாக அதை நடிகர் சோனு சூட் செய்து முடிந்தது இணையவாசிகள் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட்டதால், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வீரர்கள் அனைவரும், அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.

அதன் படி உத்திரப்பிரதேசத்தில் உள்ள தன் வீட்டிற்க் சென்ற சுரேஷ் ரெய்னா, தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் அத்தைக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக கூறி உதவி கேட்டு பதிவிட்டிருந்தார்.

SHARE