உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

38

 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் Southampton மைதானத்தில் ஜூன் 18ம் திகதி 22ம் திகதி வரை நடக்கவிருக்கிறது.

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து ஆகஸ்ட் 4ம் திகதி முதல் செப்டம்பர் 14ம் திகதி வரை இங்கிலாந்து-இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

 

 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் திகதி Nottingham மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா அணி: ரோகித் சர்மா, சுப்மான் கில், மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் (உடற்தகுதி தேர்வுக்கு உட்பட்டவர்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர், உடற்தகுதி தேர்வுக்கு உட்பட்டவர்).

ஹனுமா விஹாரி, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

SHARE