என்னை மன்னிச்சுடுங்க…CSK ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டைரிஸ்

60

 

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.’

இந்தாண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு எந்த அணி பலம் வாய்ந்தது? எந்த அணி கோப்பையை வெல்லும்? எந்த அணி சொதப்பும்? என்பது குறித்து முன்னணி வீரர்கள் பலர் கருத்து கூறி வந்தனர்.

அந்த வகையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஸ்காட் ஸ்டைரிஸ், இந்த முறையும் சென்னை அணி சொதப்பும், எந்த ஒரு மிகப் பெரிய மாற்றமும் இல்லை என்று கூறியிருந்தார்.’

ஆனால், சென்னை அணியோ பலரின் கணிப்பை தவிடு பொடியாக்கி, 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இது குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில், நான் சென்னை அணியை தவறாக கணித்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். கடந்த சீசனில் சென்னை அணி படுமோசமாக சொதப்பியதால் இந்த ஆண்டும் சொதப்பும் என்றும் தெரிவித்து இருந்தேன்.

ஆனால் சென்னை அணி தற்போது வரை அபாரமாக விளையாடி உள்ளது. டோனியின் கேப்டன்சியை நான் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். ஒரே வருடத்தில் அணியை மாற்றியமைக்க முடியாது என்று நினைத்தேன்.

ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட டோனி மூன்றாவது இடத்தில் மொயின் அலியை களமிறக்கி அணியின் பேட்டிங் வரிசையை மாற்றி விட்டார். அதன்காரணமாக தற்போது சென்னை அணி பலமான அணியாக மீண்டும் திரும்பி உள்ளது என்று கூறியுள்ளார்.

SHARE