வருண்சக்ரவர்த்தியால் தான் ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா பரவியதா?

41

 

ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா பரவ, தமிழக வீரர் வருண்சக்ரவர்த்தி தான் காரணம் என்று கூறப்பட்டுவ் வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபில் தொடரில் வீரர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதன் காரணமாக, ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீரர்களுக்கு கொரோனா பரவ கொல்கத்தா அணி வீரரும், தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து பிசிசிஐ தலைவர் சவ்ரங் கங்குலி கூறுகையில், எனக்கு தெரிந்தவரை விதிமுறைகள் மீறப்பட்டதாக நான் கருதவில்லை.

ஏனெனில் பிசிசிஐக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி எந்த ஒரு வீரரும் விதிமுறையை தாண்டவில்லை. நாட்டில் பெருகிவரும் கொரோனவைரஸ் அதிகரித்தது எப்படி எனக் கூறுவது கடினம் அதேபோலத்தான் ஐபிஎல் தொடரிலும் நோய் தொற்று எவ்வாறு பரவியது எப்படி என்று கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினமான ஒன்று.

ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் தொற்று அதிகம் இருந்த மும்பை நகரில் கூட வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த போட்டிகளில் கூட ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

ஒரே நகரத்தில் போட்டியை நடத்தி இருக்கலாம் என்று இப்போது கூறுவது சுலபம். ஆனால் நாங்கள் போட்டி அட்டவணையை திட்டமிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது .

அது மட்டுமின்றி இங்கிலாந்து தொடரையும் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் இந்த தொடரை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று நினைத்தோம். ஆனால் திடீரென கொரோனா பரவல் அதிகரித்தது துரதிஷ்டவசமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தற்போது நலமுடன் உள்ளதாக கூறி முடித்தார்.

SHARE