ஓய்வு பெற்றது ஏன்? திசாரா பெரேரா கூறிய நெகிழ வைக்கும் காரணம்

41

 

டி-20 உலகக் கோப்பைக்கு முன்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை இலங்கை வீரர் திசாரா பெரேரா கூறியுள்ளார்.

திசாரா பெரேரா நேற்று அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக 2021 அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்படும் என்றும், மேலும், இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வௌயாகியுள்ளது.

இந்நிலையில், சில மாதங்களில் டி-20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில் பெரேரா ஏன் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற் என்ன காரணம் என கேள்விகள் எழுந்ததுஇந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்த பெரேரா கூறியதாவது, நான் தற்போது வரை 12 ஆண்டுகளாக இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளேன்.

இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன்.ஒரு இளம் வீரர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக சில முன்னணி நேரம் இருக்க வேண்டும். அவசர அவசரமாக உலகக் கோப்பை தொடருக்கு தயாராக முடியாது.2023 ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது, மற்றும் டி-20 உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன.உலகக் கோப்பைகளுக்கு மிக நெருக்கமாக ஓய்வு பெறுவதை விட, இப்போது வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது என்று நினைத்தேன் என திடீர் ஓய்வுக்கான காரணத்தை பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE