ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விவரங்கள்

54

 

இணையத்தில்  தற்போது ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரென்டர் வீடியோ ஒன்று  இணையத்தில் வெளியாகி உள்ளது.

குறித்த வீடியோவில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் பல சிறம்பம்சங்களை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.

இதன்படி இயர்பீஸ் டாப் பெசல் பகுதியில் மாற்றப்பட்டதால் பெசல் சிறியதாகி இருக்கிறது.

அதுமட்டுமின்றி பேஸ் ஐடி அம்சத்திற்கான சென்சார்கள் சிறு நாட்ச் இருக்கும் பகுதியிலேயே பொருத்தப்படுகிறது.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிய கேமரா சென்சார்கள், LTPO 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி வசதி, மேம்பட்ட கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், பெரிய பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.

இது ரென்டர் மாடல் கிராபைட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஆன்டெனா பேண்ட் நிறம் மாற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கிறது என்று கூறப்படுகின்றது.

SHARE