இலங்கையை முழுமையாக முடக்க தீர்மானம்?

19

 

இலங்கையை முழுமையாக மூட வேண்டுமா என்பது தொடர்பிலான யோசனை இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிககவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அமைச்சரவையின் இணக்கத்திற்கமைய நாட்டை முழுமையாக அல்லது பகுதியாக மூடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய விவசாய, மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி தொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சில்லறை கடைகள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

SHARE