கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபர்கள்; நேர்ந்த கதி!

24

 

யாழில் கொரோனா விதிமுறைகளை கணக்கிலெடுக்காமல் சண்டியர் கிண்ண ரி 20 கிரிக்கெட் போட்டி நடத்திய வாலிபர்கள் கூட்டமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் Louts ground சண்டியர்கள் 2021 என ரி20 போட்டிகளை நடத்தி வந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளிற்கும், விளையாட்டு நிகழ்வுகளிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், அதை கணக்கிலெடுக்காமல் இளைஞர்கள் பலர் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேவேளை , அண்மையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஞானம்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனை கண்டுகொள்ளாத ஊர்காவற்துறை இளைஞர்கள் நேற்று Louts ground சண்டியர்கள் 2021 என ரி20 போட்டியை நடத்தியுள்ளனர். அத்துடன் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் இந்த போட்டியில் ஆடியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டில் கல்லந்துகொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE