ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 200 பேர் என்ற எண்ணிக்கையில் கொவிட் மரணங்கள் நிகழக்கூடும்

66

 இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 200 பேர் என்ற எண்ணிக்கையில் கொவிட் மரணங்கள் நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுயாதீன உலக மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி மையம் எனப்படும் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவகத்தின்(IHME) ஆய்வின் ஊடாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் நாட்டில் 56 மரணங்கள் பதிவாகியிருந்தன.

அந்த வகையில் செப்டெம்பர் மாதமாகும் போது, இந்த மரண எண்ணிக்கையானது 20, 000 ஐ அண்மிக்கக் கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது பரவும் கொவிட் அலைகள் மற்றும் முதலாம் அலை என்பன பிற நாடுகளை காட்டிலும் அதிகமாக இருப்பதைக் கண்டோம்.

இருப்பினும், பொதுமக்கள் கடைப்பிடிக்கும் சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நோய்தடுப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

SHARE