நரேந்திர மோடியாக கோட்டாபய மாறக்கூடாது! உடனடியாக நாட்டை முழுமையாக முடக்குங்கள்

21

 

போர்ட் சிட்டி பொருளாதார ஆணைய யோசனை மீதான விவாதத்தை ஒத்திவைத்து, முழுமையான முடக்கலுக்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் நிறுத்தி கொரோனாத்; தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கம் அதன் நிதியைத் திருப்பிவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அரசாங்கம் முடக்கலுக்கு சென்று கொரோனாப் பரவலைக் கட்டுப்டுத்த செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை பின்னர் மேற்கொள்ளலாம் என்று மனோ கணேசன் வலியுறுத்தினார்.

அரசாங்கம் நாட்டு மக்களை மோசமான தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தொற்றுநோய்கள் தொடர்பில் ஒரு வித்தியாசத்தைக் காணமுடிகிறது.

பொதுமக்கள் சாலைகளில் விழுந்து இறப்பதை மட்டுமே இலங்கையின் காணமுடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வோஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை மேற்கோள்காட்டி இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையில் ஒரு மாதத்தில் 2,000 பேர் இறந்துவிடுவார்கள் என்று மனோ கணேசன் குறிப்பிட்டார்.

SHARE