விமான நிலையம் அருகே பகீர் சம்பவம்: மாயமான ஆயுததாரியை தேடும் பொலிஸ்

21

 

வான்கூவர் சர்வதேச விமான நிலையம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் மரணமடைந்த நிலையில், தப்பிச்சென்ற அந்த ஆயுததாரியை பொலிசார் தேடி வருகின்றனர்.

வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஞாயிறன்று மதியம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், ஆயுததாரியை சுற்றி வளைத்த நிலையில், பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபின்னர் அந்த நபர் மாயமாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

மேலும், விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் நுழைவாயில் மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான நுழைவாயிலில் சிறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

SHARE