பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு ; 7 பேர் பரிதாப பலி

24

 

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் புகுந்த நபர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் Colorado பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பெரியவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவன் சிறுவனோ, சிறுமியோ தெரியவில்லை என்றும், அதே சமயம் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிரி பிழைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Colorado-வில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்கு துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்த நபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

துபாக்கிச் சூடு நடத்திய நபரும், இதில் உயிரிழந்துள்ளான். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் காதலி இருந்ததாகவும், அவர் மீது இருந்த வெறுப்பின் காரணமாக இப்படி ஒரு கொடூர செயலை அவன் செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேக்கின்றனர். இந்த சம்பவம் காரணமாக 6 வயதான ஆண்கள் மற்றும் ஒரு நடுத்த ஆண் ஆகியோர் உயிரிழந்திருப்பதாகவும், ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் Colorado பகுதியின் தலைமை பொலிஸார் Vince Niski கூறுகையில்,

இந்த சம்பவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போது, நாங்கள் நடுக்கத்தில் உள்ளோம். அந்தளவிற்கு மோசமான துப்பாக்கிச் சூடாக உள்ளது.

இது குறித்து தீவிர விசாரணை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். முதல் இன்னும் சம்பவ இடத்தில் இருக்கும் புலனாய்வாளர்கள் வரை, நாங்கள் அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு நடுங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE