இந்தியாவில் அதிதீவிரமடைந்த கொரோனா வைரஸ்

22

 

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், தடுப்பூசி பலன்களை கூட தள்ளிப்போடக்கூடியது என உலக சுகாதார மைய தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் மேலும் அளித்த தகவலில், இந்தியாவில் நேற்று மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவிட் 19 வைரஸின் B.1.617 என்ற உருமாறிய ரகமானது முதன்முறையாக கடந்த அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இப்போது நாட்டில் ஏற்பட்டுவரும் மிக மோசமான கொரோனா பரவலுக்கு இந்த வகை உருமாறிய வைரஸே காரணம்.

அதிக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், உலக நாடுகள் பலவும் இந்த வைரஸ் மாற்றத்தை அச்சத்துடன் பார்த்து வருகின்றனர்.

தடுப்பூசிகள் உருவாக்கும் ஆன்டிபாடிக்களுடன் கூட எதிர்த்து போராடும் தன்மை இந்த வைரசுக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் ஒன்று கூடியதும், வெறுமனே சம்பிரதாயத்துக்கு மட்டும் மாஸ்குகளை அணிந்ததும் கொரோனா பரவலுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE