இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 10லட்சம் பேர் கொரோனாவினால் உயிரிழப்பர்

20

 

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 10 லட்சம் பேர் கொரோனாவினால் உயிரிழக்கக்கூடும் என உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் கொரோனா மரணங்களும் அதிகம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழ் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாளங்களில் 3,66,161 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில், சுகாதார மையங்களில் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு அதிக கட்டணத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் வெவ்வேறு விதமான விலையை தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்து உள்ளன. டெல்லி, மும்பையில் உள்ள மருத்துவமனைகள் ஒரு தடவை தடுப்பூசி போட ரூ.900 வசூலிக்கின்றன.

SHARE