யாழ் பிள்ளையார் ஆலயத்தில் இப்படி ஒரு சம்பவம்

20

 

யாழ் கட்டைவேலி கரவெட்டிப் பகுதியில் உள்ள நுணுவில் குளக்கட்டு பிள்ளையார் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான ஆபரணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை களவாடப்பட்டுள்ளது.

நேற்றய தினம் அதிகாலை 5 மணியளவில் பூசகர் கோயிலை திறந்து பார்த்தபோது நகைகள் களவாடப்பட்டது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

களவாடப்பட்டவற்றில் ஐம்பொன் இயந்திரத் தகடு, இரு கிரீடங்கள், தங்க சங்கிலி ஒன்று, வெள்ளிச் சங்கிலி உட்பட பல பெறுமதியான ஆபரணங்கள் காணாமல்போயுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE