சங்குப்பிட்டியில் மாயமான பிள்ளையார் சிலை

37

 

சங்குப்பிட்டியில் உருத்திர சேனையால் கடந்த மாசி மாதம் மீள்பிரதிஸ்டை செய்யப்பட்டு சில நாட்களிலேயே காணாமல் ஆக்கப்பட்ட 3000 வருட வரலாற்றையுடைய சங்குப்பிட்டி பிள்ளையார் சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிள்ளையார் சிலை இன்று அதிகாலையிலேயே அங்கு காணப்பட்டதாக அவ்வழியால் பயணித்த மக்கள் தெரவித்துள்ளனர்.

பிள்ளையார் சிலை யாரால் மறுபடி பிரதிஷ்டை செய்யப்பட்டது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே இருந்த அதே கைவண்ணத்தில் தற்போதும் உருவாக்கப்பட்டிருப்தை வைத்து பிரதிஷ்டை செய்தவர்கள் யார் என்பதை ஊகிக்க முடிகின்றது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.ஆகவே இனியும் இந்து மக்களின் நம்பிக்கையோடும் உணர்வுகளோடும் அடிக்கடி யாரும் விளையாட அனுமதிக்காது பிள்ளையாரை சரியான விதத்தில் பராமரிக்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE