2021 டி-20 உலகக் கோப்பை இந்தியாவிலிருந்து மாற்றம்?

22

 

2021 டி-20 உலகக் கோப்பை இந்தியாவிலிருந்து மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2020 அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா பரவல் காரணமாக 2021 ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின், 2021 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தியாவில் தற்போதைய கொரோனா சூழல் காரணமாக ஐபிஎல் தொடர் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

மேலும், திட்டமிட்ட படி அக்டோபர்-நவம்பர் மாதம் டி-20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ, ஐசிசி-யிடம் கால அவகாசம் கோரியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மோசமான கொரோனா நிலைமை காரணமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி-20 உலகக் கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிசிசிஐ ஐசிசி-யிடம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ, ஐ.சி.சி இடையேயான கூட்டத்தின் போது, டி-20 நடத்துவது குறித்து இறுதி முடிவெடுக்கு பிசிசிஐ 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டது.

ஆனால், தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் நடைபெற்றாலும், தொடரை நடத்தும் உரிமையை தக்கவைக்க இந்திய விரும்புவதாக பிசிசிஐ, ஐசிசி-யிடம் தெரிவித்ததாக பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

SHARE