விவாகரத்து முடிந்த 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை திருமணம் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்!

24

 

இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான்.

தவானுக்கும் ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது மற்றும் வித்தியாசமானதும் கூட.

ஏனெனில் தவானை விட அவர் மனைவி ஆயிஷா 10 வயது மூத்தவர் ஆவார். ஆயிஷா ஆங்லோ – இந்தியன் ஆவார். அவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

அங்கு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்த நிலையில் இரண்டு குழந்தைகள் ஆயிஷாவுக்கு பிறந்தது. பின்னர் கணவரை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

இதன் பின்னர் தான் தவானுடன் அவருக்கு பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்தது. ஹர்பஜன் சிங்கின் நண்பர்கள் லிஸ்டில் ஆயிஷா மற்றும் தவான் இருவரும் இருந்த நிலையில் அதன் மூலம் இருவரும் பேசி நட்பானார்கள். இதன் பின்னர் நட்பு காதலாகி தவான் – ஆயிஷாவுக்கு கடந்த 2009ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரராக தவான் உருவெடுத்த பின்னர் 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தை பலரும் விமர்சித்தனர்.

ஏனெனில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆயிஷா தவானை விட 10 வயது மூத்தவர் என்பதால் இந்த விமர்சனம் எழுந்தது.

ஆனால் தவானின் தாயார் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். தவானின் திருமண நிகழ்வில் விரட் கோஹ்லி கலந்து கொண்டார். ஆயிஷா – தவான் தம்பதிக்கு 2014ல் ஆண் குழந்தை பிறந்தது.

SHARE