சஞ்சய் மஞ்ரேக்கருக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழன் அஸ்வின்

22

 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சிறந்த டெஸ்ட் வீரர் கிடையாது என்று கூறியதால், அதற்கு அஸ்வின் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர், சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று கூறலாம். இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கும், இவருக்கும் அடிக்கடி இணையத்தில் வார்த்தை மோதல் உண்டாகும். அ

ந்த வகையில் சஞ்சய் மஞ்ரேக்கர் இப்போது, அஸ்வின் ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் கிடையாது. அவர் இந்திய மண்ணில் மட்டுமே சிறப்பாக பந்து வீசுகிறார்.

வெளிநாட்டு மண்ணில் அந்தளவிற்கு அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவது கிடையாது. எனவே என்னைப் பொறுத்தவரை அஸ்வின் ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் கிடையாது என்று கூறினார்.இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் பலரும், சஞ்சய் மஞ்ரேக்கரை திட்ட ஆரம்பித்தனர். அது தொடர்பாக மீம்ஸ் கூட பறக்கவிட்டனர்.

தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அஸ்வின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தின் மீம்ஸ் காட்சியை பகிர்ந்துள்ளார். அதில், சாரி அப்படி சொல்லாதடா மனசு வலிக்கு என்று கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள், இப்படிப்பட்ட நபருக்கு இது தான் சரியான பதிலடி என்று அஸ்வினை பாராட்டி வருகின்றனர்.

SHARE