கொரோனா வைரஸின் தாக்கம் : நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் அபாய நிலை

20

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் என்பது நாட்டின் பொருளாதாரத்தை முடக்கம் செயற்பாடுகளாகவே உள்ளது.

குறிப்பாக சீனா தனது நாட்டிற்குள் எந்தவித கொரோனா வைரசுக்களையும் பாதிக்காத வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை ஏனைய நாடுகளை பொருளாதார ரீதியில் வீழ்த்தி குறித்த நாடுகளுக்கு தனது மருத்துவ பொருட்களை விற்பனை செய்வதேயாகும். அது மட்டுமன்றி இலங்கைத்தீவில் தனது காலணித்துவத்தை கொண்டுவரும் அடுத்த செயல்திட்டமாக கொழும்பில் போர்ட்சிற்றி அமைத்து அங்கு சீனர்களை குடியேற்றி ஆசியப் பிராந்தியத்தில் தன்னை ஒரு சர்வதிகார நாடாக நிலைநாட்டுவதே சீனாவின் அடுத்தகட்ட திட்டமாகும். ஆயுதமுனை கொண்டு சர்வதிகார நாடுகளை வெற்றிகொள்ள முடியாது என்பது இவர்களின் நீண்டகால திட்டமாகும்.

ஆகவே இலங்கை அரசானது சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொண்டதால் மாத்திரமே குறித்த அபாய சூழலில் இருந்து எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதே இன்றைய இலங்கைத்தீவின் முக்கிய நிலைப்பாடாகும்.

(செய்தி ஆசிரியர் இரணியன்)

 

SHARE