உதவியென்றால் அவர் தான் முதலில் வருவார் – தளபதி விஜய்

14

 

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் அளித்த சமீபத்திய பேட்டியில் தளபதி விஜயுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

‘விஜய் சாருக்கு எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அவரது வாயிலிருந்து ஒரு முறை கூட எதிர்மறையான விஷயம் எதுவும் வராது.

எப்போதும் பாசிட்டிவ் ஆக இருப்பவர். மேலும் நண்பர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் உடனே செய்பவர். எனக்கும் எதாவது உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக முதலில் அவர் உதவி செய்வார்’ என கூறியுள்ளார்.

SHARE